கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் : ஆட்சியர் அலுவலகம் முற்றுகை..!

29 January 2021, 11:36 am
Anganwadi Protest- Updatenews360
Quick Share

கோவை : மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பணி நிரந்தரம், கால முறை ஊதியம் மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அங்கன்வாடி பணியாளர் சாந்தி கூறியதாவது: அங்கன்வாடி பணியாளராக கடந்த 30 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம் எங்களுக்கு கால முறை ஊதியத்தை அரசு வழங்க வேண்டும்.

நாங்கள் அரசுக்கு கை கொடுத்து வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதோடு, ஓய்வு பெறும் போது ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். ஆனால், ரூ.1 லட்சம் தான் வழங்கின்றனர். முறையான பணிக்கொடை வழங்க வேண்டும். என்றார். இந்த முற்றுகை போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 32

0

0