சூட்கேஸில் துண்டு துண்டாக கிடந்த பெண்ணின் சடலம்.. விசாரணையில் பகீர்… சென்னையில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2024, 11:59 am

சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக சூட்கேசில் அதிக அளவில் ரத்தக்கறை இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சூட்கேசை மீட்டு திறந்து பார்த்தனர்.
இதில், பெண் ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்தது.

பெண்ணின் உடலை மீட்ட போலீசார், உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? கொல்லப்பட்டது யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்றது.

இதில் அந்த பெண் மணலி பகுதியை சேர்ந்த 31 வயது பெண் என்பதும், அவரது பெயர் தீபா என்பதும் தெரியவந்துள்ளது. இந்தக் கொலை எங்கு நடந்தது..

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

வேறு ஏதேனும் இடத்தில் கொலை செய்து உடலை கொலையாளிகள் இங்கு கொண்டு வந்து போட்டனரா? என்பது உள்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்கள். குறிப்பிட்ட அந்த இடத்தில் சூட்கேசுடன் யாரேனும் சென்றார்களா? என சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

தடயவியல் நிபுணர்களும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். சென்னையின் மிக முக்கியமான இடமான துரைப்பாக்கத்தில் பெண்ணின் சடலம் சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • prakash raj asked bjp that you are not ashamed of this type of politics ச்சீ…உங்களுக்குலாம் வெக்கமே இல்லையா? பாஜகவை கண்டபடி பேசும் பிரகாஷ் ராஜ்? என்னவா இருக்கும்?