அண்ணா நினைவுதினத்தையொட்டி திமுக அமைதி பேரணி : நினைவிடத்தில் ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி

3 February 2021, 10:52 am
DMk stalin 1 - updatenews360
Quick Share

சென்னை : அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள நினைவிடத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அதிமுக, திமுக நிர்வாகிகள் அண்ணாவின் நினைவுகளை பகிர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அண்ணாவின் நினைவுதினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியானது, சென்னை வாலாஜா சாலையில் இருந்து புறப்பட்டு அண்ணா நினைவிடத்தில் நிறைவடைந்தது. பின்னர், திமுக தலைவர் முக ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு,எச்.ராஜா, உள்ளிட்டோர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்த அண்ணா நினைவிடத்தில், அதிமுக, திமுக தொண்டர்களும் வரிசையாக சென்று அஞ்சலி செலுத்தினர்.

Views: - 0

0

0