துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுளை விசாரிக்க குழு : நாளை மறுநாள் முதல் விசாரணை தொடக்கம்..!

14 November 2020, 1:40 pm
Surappa Explains- Updatenews360
Quick Share

அண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் முதல் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் அனுமதியின்றி அண்ணா பல்கலை.,க்கு சிறப்பு தகுதி வழங்குமாறு மத்திய அரசுக்கு விண்ணப்பித்தது, அரியர் தேர்வு விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டுள்ளது உள்ளிட்ட அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் அண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பா மீது வைக்கப்பட்டது. இதனால், அவர் மீதான புகாரை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்தது. இந்தக் குழு அவர் மீதான குற்றச்சாட்டை விசாரித்து, 3 மாதத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இக்குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைநாளை மறுநாள் முதல் தொடங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் சூரப்பா, பல்கலை. பதிவாளர், உயர் அதிகாரிகள் மற்றும் புகார்தாரர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

Views: - 37

0

0

1 thought on “துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுளை விசாரிக்க குழு : நாளை மறுநாள் முதல் விசாரணை தொடக்கம்..!

Comments are closed.