நீட்டுக்கு நோ கெட்-அவுட்.. வேளாண் சட்டங்களும் இருக்கும் : தமிழக அரசுக்கு அண்ணாமலை சவால்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2021, 1:09 pm
annamalai Challenge- Updatenews360
Quick Share

சென்னை : தலைகீழாக நின்னாலும் கூட நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நேற்றைய முந்தைய தினம் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் தேர்வு எழுத இருந்த மாணவர் தனுஷ் அச்சத்தில் தற்கொலை செய்தார்.

இதையடுத்து நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி மசோதா நேற்று சட்டப்பேரவையில் ஒருமனதாக தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நீட் பாஜகவை பொறுத்தவரை ஏழை மாணவர்களுக்கு எதிரானது கிடையாது என்றும் சமூக நீதிக்கும் எதிரானது கிடையாது என விளக்கமளித்தார்.

மேலும் பேசிய அவர், நீங்கள் தலைகீழாக நின்று மசோதாவைக் கொண்டு வந்தாலும் கூட நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும் 3 வேளாண் சட்டங்களும் தமிழகத்தில் இருக்கும் என்றும் அதை மாற்ற முடியாது என்றும் கூறினார்.

நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதா சட்ட முன் வடிவை ஆளுநரிடம் தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 193

0

0