சென்னை ரிட்டர்ன் ஆன அண்ணாத்த : படப்பிடிப்பு முடிந்து நடிகர் ரஜினி திரும்பினார்!!

12 May 2021, 3:09 pm
Rajini Chennai - Updatenews360
Quick Share

அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தும் வரும் படம் அண்ணாத்த. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பூ, நடிகர் சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார்.

கொரோனா காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.

படப்பிடிப்பு முடிந்ததையடுத்து ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த ரஜினிகாந்த், பின்னர் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.

அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகும் என திரைப்படத்தின் தயாரிப்பு குழு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 220

0

0