முழு ஊரடங்கால் நியாய விலைக் கடைகள் இயங்காது என அறிவிப்பு..!

Author: kavin kumar
7 January 2022, 10:39 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் வரும் ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் நியாய விலைக்கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஞாயிறு (09.01.2022) அன்று கொரோனா மற்றும் ஒமைக்ரான் திரிபு பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறை அமல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் ராஜாராமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொது வினியோக திட்ட நியாய விலைக்கடைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று செயல்பாடு என தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆணையாளர் சூழல்நிலைகேற்ப வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பொங்கல் பரிசு பெற டோக்கன் பெற்ற அட்டைதாரர்களுக்கு 13-ம் தேதிக்கு முன்பாக வினியோகம் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Views: - 340

0

0