பைக் மீது மற்றொரு பைக் மோதி விபத்து : நிலை தடுமாறி விழுந்த வாகன ஓட்டி மீது ஏறிய லாரி.. ஷாக் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2021, 5:59 pm
Bike Lorry Clash -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : மார்த்தாண்டம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி காவுவிளை பகுதியை சேர்ந்தவர் 52 வயதான மாதவன். இவர் மரவேலை செய்து வருகிறார. இன்று காலை நட்டாலம் பகுதியில்  வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் பயணம் என்ற பகுதி அருகே  சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாதவன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் காவல்துறையினர் வழக்குபதிவு அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதிதல் மாதவன் ஒட்டிவந்த இருசக்கர வாகனம் மீது மற்றொறு இருசக்கர வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாதவன் மீது லாரி  மோதியது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநர் சுரேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மற்றொரு இருசக்கர வாகன ஓட்டியை தேடி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த மாதவனுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் கல்லூரி படிக்கும் இருமகன்களும் உள்ளனர்.

மற்றொரு பைக் மோதிய மாதவன் கீழே விழுந்த போது லாரி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதை பதைக்க வைத்துள்ளது.

Views: - 313

0

0