வல்லநாடு தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் மீண்டும் விரிசல்.. வாகன ஓட்டிகள் அச்சம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2024, 7:38 pm
Bridge
Quick Share

தூத்துக்குடி- வல்லநாடு தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் மீண்டும் பழுதடைந்துள்ளதால் போக்குவரத்து பயணிகளுக்கு அச்சம் ஏற்படுகிறது

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கடந்த 2013ஆம் ஆண்டு புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் அமைக்கப்பட்ட போதே தரமானதாக இல்லை என மக்கள் புகார் கூறி வந்தனர். இதற்கிடையில் 2017ஆம் ஆண்டிலிருந்து ஒரு முறை பாலம் பழுதடைந்து வந்தது.

இதற்காக ரூ.3 கேடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டது. 2020 யிலிருந்து தற்போது வரை-9 முறை விரிசல் ஏற்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் இருந்து வந்த மத்திய சாலை ஆராய்ச்சி நிலைய நிபுணர்கள் பாலத்தின் தரம் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து பாலத்தை சீரமைக்க ரூ.13கோடி நிதி ஒதுக்கீடு செய்தனர். பணி நடைபெற்ற நிலையில் இந்த பாலத்துக்கு அருகில் உள்ள சுமார் 125 ஆண்டு பழமையான பாலம் சிறிய சேதம் கூட ஏற்படாமல் இன்றும் கம்பீரமாக உள்ளது.

மேலும் படிக்க: காங்கிரஸ் கட்சிக்கு 100 தொகுதி கூட கிடைப்பது சந்தேகம் : மீண்டும் குண்டை தூக்கிப் போட்ட பிரசாந்த் கிஷோர்!

ஆனால், புதிய பாலம் கட்டப்பட்டு சில ஆண்டுகளிலேயே அடிக்கடி சேதமடைவதால் அதன் தரம் குறித்துசந்தேகம் எழுந்துள்ளது.

2 பாலங்களையும் சீரமைக்க ரூ.13கோடி நிதி ஒதுக்கியுள்னர். ஆனால், தரமில்லாத கான்ங்கீரிட்டை அகற்றாமல் உத்தரவாதம் இல்லாத ரசாயன பூச்சு மூலம் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்வதால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.

இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. மேலும், பாலத்தின் தூண்களுக்கு இடையே இடைவெளி அதிகமாக உள்ளதால் அதிர்வுகள் ஏற்பட்டு அடிக்கடி பழுதாகி வருகிறது.

மீண்டும் மீண்டும் பாலம் சேதம் அடைவதை தவிர்க்க பாலத்தில் தளத்தை முழுமையாக அகற்றிவிட்டு புதிய கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 205

0

0