லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு : மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தார்!!

2 November 2020, 11:50 am
Corporation Commissioner - Updatenews360
Quick Share

கோவை : “விழிப்பான இந்தியா” “செழிப்பான இந்தியா” என்ற பெயரில் லஞ்ச விழுப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

லஞ்ச ஒழிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது.

இந்த பேரணியை மானகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் துவைக்கிவைத்தார். இதில் மாநகராட்சி ஊழியர்கள் இலஞ்ச ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் கலந்துகொண்டார்கள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்ததும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழியை ஏற்க உள்ளனர்.

Views: - 20

0

0