கஞ்சா விற்றால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்: குமரி எஸ்.பி எச்சரிக்கை.!

23 June 2021, 10:46 pm
Quick Share

கன்னியாகுமரி: கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என்று மாவட்ட போலீஸ் எஸ்பி பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:- நான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி, கன்னியாகுமரி மாவட்டத்தின் போலீஸ் எஸ்பி யாக பொறுப்பேற்றேன். அன்றைய நாளில் இருந்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது தனி கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கை தடுக்க போலீசார் அறிவுறுத்தினேன். அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டத்திலும் தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நான் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 215 பேர் மீது 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 447 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 20 நாட்களில் மட்டும் கஞ்சா வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு 212 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குமரி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும். இவ்வாறு எஸ்பி பத்ரிநாராயணன் கூறினார்.

Views: - 201

0

0