அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா..? வாய்ப்புகளை மறுக்க இதுதான் காரணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Rajesh
14 July 2022, 7:37 pm

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். அவர் நடிப்பில் படம் வெளியாகி சுமார் ஒன்றரை வருடங்கள் ஆவதால், அவரது வரவிருக்கும் படத்தின் மீது பார்வை அனைவரிடம் உள்ளது.

சமீபத்தில், நவீன் பாலிஷெட்டிக்கு ஜோடியாக தனது புது படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழில், ‘தெய்வ திருமகள்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

இந்நிலையில், இவருக்கு தைராய்டு நோய் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன் தான் இவருக்கு இந்த நோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், புதிய படத்தில் ஏதும் கமிட்டாகாமலே இருக்கிறாராம்.

தற்போது, ஏ.எல்.விஜய் இயக்கவிருக்கும் இப்படம் ஒரு பெண்ணை மையமாகக் கொண்ட பாடம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இதனால், அனுஷ்காவை தனது படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டாராம் இயக்குனர். ஆனால், தைராய்டு பிரச்சனை காரணமாக இந்த பேச்சு வார்த்தை பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?