இனி 40 வருடத்திற்கு பிரச்சனையே வராது : திருச்சி மக்களை குளிர வைத்த அமைச்சர் கே.என்.நேருவின் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2022, 8:28 pm
Minister KN Nehru - Updatenews360
Quick Share

திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தால் 40 வருடங்களுக்கு மக்கள் பயன்பாட்டில் இருக்கும் என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், காவிரிப் பாலத்தின் மேல் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை முன்னிட்டு போக்குவரத்தை மாற்றி அமைத்தல் தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பழைய காவேரி பாலத்தினை சரி செய்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தமிழக முதல்வர் 6.50 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார்.

KN Nehru Dmk Minister Trichy

அதன்படி பாலம் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால் 40 வருடங்களுக்கு இந்த பாலம் பயன்பாட்டிற்கு வரும். புதிய பாலம் 13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள நிலையில் அதுவரை பழைய பாலத்தினை சரி செய்து பயன்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளானது பழைய காவேரி பாலத்தின் அடிப்பகுதியில் முழுமையாக முடிக்கப்பட்டு அதன் மேற்பகுதியில் பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகள் 8 மாதத்திற்குள் முடியும் என கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மண்டல குழு தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Views: - 601

0

0