ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : பேரிடர் குழு எச்சரிக்கை!!

26 November 2020, 12:18 pm
Aarani River- Updatenews360
Quick Share

திருவள்ளூர் : ஆரணி ஆற்றில் வெள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக லட்சுமிபுரம் தடுப்பணை நிரம்பி வழிகிறது ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் பாதுகாப்பாக இருக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தி மூலம் பொது மக்களுக்கு தகவல் அனுப்பி வருகிறது.

நிவர் புயலால் பெய்து வரும் கனமழை காரணமாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் நிலையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 600 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காரணமாக பொன்னேரி லட்சுமிபுரத்தில் உள்ள தடுப்பணை நிரம்பி வழிகிறது இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுப்பணையை காண்பதற்கு பொது மக்களை அனுமதிக்காமல் தடை விதித்துள்ளன மேலும் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் குளிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்படுவதால் பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தி மூலம் யாரும் இறங்க வேண்டாம் பாதுகாப்பாக இருக்க பொது மக்களுக்கு தகவல் அனுப்பி வருகிறது.

Views: - 12

0

0