நள்ளிரவில் நண்பருடன் வாக்குவாதம் : கொலை செய்து பொதுக்கழிப்பிடத்தில் உடலை மறைத்து வைத்த 4 பேர் கைது!!

16 November 2020, 9:47 am
Murder - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகேயுள்ள காயல்பட்டனம் பொதுக்கழிப்பிடத்தில் கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் துவரந்தையைச் சேர்ந்த பச்சைமால் (வயது 53). இவர் முக்காணி அம்பேத்கர் நகரில் உள்ள மகள் வீட்டில் வசித்து வருகிறார்.மேலும் வெளியூரில் தங்ககி கட்டட வேலை செய்து வருவது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த 09.11.2020 அன்று இரவு சாப்பிட்டுவிட்டு ஆறுமுகநேரி செல்வதாக தன்னிடம் கூறிவிட்டுச் சென்றவர் தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயல்பட்டினம் ரத்தினபுரி பப்பரபள்ளி சுடுகாட்டு ரோட்டில் உள்ள பொதுக்கழிப்பிடத்தில உள்ள பாத்ரூமில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தினர். உடலை பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் உடலில் காயங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து ஆறுமுகநேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்..

தீவிர விசாரணையில் இறந்த பச்சைமால் என்பவருடன் காயல்பட்டினம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் வேல்முருகன் (வயது 32), ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த சுந்தரம் மகன் மாரியப்பன் (வயது 43), தேனி மாவட்டம் காணவிளையைச் சேர்ந்த ராமசாமி மகன் குமார் (வயது 49) ஆகியோருடன் திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகே பாரதி நகரில் உள்ள ஒருவர் வீட்டின் வளாகத்தில் உள்ள தனி அறையில் தங்கி வீடு கட்டும் கொத்தனார் வேலை செய்து வந்தனர். கடந்த 12.11.2020 அன்று இரவு தங்கியருந்த அறையில் வைத்து அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டை நடந்துள்ளது.

இந்த சண்டையில் மேற்படி வேல்முருகன், மாரியப்பன், குமார் ஆகியோர் அவரை தாக்கி கொலை செய்து பரப்பாடி நடுத்தெருவைச் சேர்ந்த தங்கதுரை மகன் செல்வகுமார் (வயது 36) ஓட்டி வந்த மாருதி ஆம்னி வேனில் ஏற்றி காயல்பட்டினம் கொண்டு வந்து இரத்தினாபுரி பப்பரப்பள்ளி சுடுகாட்டு ரோட்டில் உள்ள பாத்ரூமில் பச்சைமால் பிரேதத்ததை மறைத்து வைத்துள்ளது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மர்ம மரணமாக பதிவு செய்ப்பட்ட வழக்கை மேற்படி கொலை வழக்காக ஆறுமுகநேரி போலீசார் மாற்றம் செய்து, இன்று காயல்பட்டினம் லட்சுமிபுரத்தை சேர்ந்த மகன் வேல்முருகன் (வயது 32), ஆழ்வார்திருநகரியை சேர்ந்த மாரியப்பன் (வயது 43), தேனி மாவட்டம் காணவிளையை சேர்ந்த குமார் (வயது 49) மற்றும் பரப்பாடி செல்வகுமார் (வயது 36) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின் மேற்படி இரு சக்கர வாகனம், மாருதி ஆம்னி வேனையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Views: - 47

0

0