அதிமுக கூட்டணியுடன் இணைந்து 5 இடங்களில் போட்டி : அர்ஜுன் சம்பத் தகவல்..!!!

2 March 2021, 6:08 pm
arjun sambath - updatenews360
Quick Share

வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 5 இடங்களில் போட்டியிட கடிதம் அனுப்பியுள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் இந்து மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் அக்கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் தமிழகம் முழுவதும் பெறப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது. இன்று கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 8 பேர் விருப்ப மனுக்களை அர்ஜுன் சம்பத்திடம் அளித்தனர். பின்னர் அக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் பேசியதாவது :- இந்து மக்கள் கட்சி ஆன்மீக அரசியல் கொள்கைகளை, இந்துகள் வாக்கு வங்கியை, இந்து ஒற்றுமையை வலியுறுத்தி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. கூட்டணி அமைத்து போட்டியிட தயாராக உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும், 5 தொகுதிகள் கேட்டும் கடிதம் அனுப்பியுள்ளோம். இஸ்லாமிய அமைப்புகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவதைப் போல், இந்து மக்கள் கட்சிக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.

அதேபோல், பிஜேபியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையில் இந்த கோரிக்கை இடம் பெற வேண்டும். இஸ்லாமிய, கிறிஸ்தவ, ஜாதி அமைப்புகளோடு கூட்டணி அமைக்க இரண்டு கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகிறது. மதசார்பற்ற கட்சி என்று சொல்லும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் முதலாவதாக முஸ்லிம் லீக் கட்சியை அழைத்துப் பேசி இட ஒதுக்கீடு செய்துள்ளது. குற்ற பின்னணியில் உடையவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும், என்று தெரிவித்தார்.

Views: - 59

0

0