உயரதிகாரியை மதுபோதையில் கத்தியை காட்டி மிரட்டிய ஆயுதப்படை காவலர்!!

23 September 2020, 2:13 pm
Police Arrest - updatenews360
Quick Share

விருதுநகர் : ஆயுதப்படை உதவி ஆய்வாளரை மது போதையில் கத்தியை காட்டி ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விருதுநகர் ஆயுத படை காவலராக கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிபவர் மாயக்கண்ணன் (வயது 30). இவர் கடந்த 20 நாட்களாக பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதற்காக அவர் எந்தவித முன் அனுமதியும் பெறவில்லை இந்த நிலையில் நேற்று பணிக்குத் திரும்பிய மாயக்கண்ணன் குடிபோதையில் ஆயுதப்படை அலுவலகத்திற்க்கு வந்துள்ளார் .

இவரைத் தடுத்து நிறுத்திய ஆயுதப்படை வாயிற் காவலர்களிடம் மாயகண்ணன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் இதை அறிந்து அங்கு வந்த ஆயுதப்படை உதவி ஆய்வாளரிடம் தன்னிடம் இருந்த கத்தியை காட்டி தன்னை பணிக்கு அனுப்புமாறு மாயக்கண்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது .

இதை அடுத்து உதவி ஆயுதப்படை ஆய்வாளர் ஜெயக்குமார் அளித்த புகாரின் பெயரில் சூலக்கரை காவல்துறையினர் மாயகண்ணணை கைது செய்து விருதுநகர் குற்றவியல் எண்.2 நீதிமன்ற நடுவர் நிஷாந்தினியிடம் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்பு அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் நிஷாந்தினி உத்தரவிட்டதை அடுத்து மாயக்கண்ணன் விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். ஆயுதப்படை காவலர் மாயக்கண்ணன் குடிபோதையில் உயரதிகாரிகளை கத்தியை காட்டி மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Views: - 7

0

0