குருமூர்த்தி தேவரை தாக்கிய கூலிப்படையினரை கைது செய்க : கோவை கமிஷ்னரிடம் புகார் மனு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2021, 2:30 pm
Gurumoorthy Devar -Updatenews360
Quick Share

கோவை : கோவையில் அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத்தினர் இன்று மாநகர் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து கமிஷனரிடம் ஒரு புகார் மனு அளித்தனர்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 22ஆம் தேதியன்று திருநெல்வேலி கே.டி.சி நகர், மாதா மாளிகையில் நடைபெற்ற இல்ல திருமண விழாவிற்கு சென்ற எங்கள் கழக நிறுவன தலைவர் மூர்த்தி தேவரின் வாகனத்தை ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது கூலிப்படையை சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அவர்கள் அரிவாள் கத்தி மற்றும் கம்புகளை கொண்டு எங்கள் கழக நிறுவன தலைவர் மூர்த்தி தேவரின் 2 கார்களை அடித்து உடைத்து விட்டனர். வைகுண்டத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது கூலிப்படைகளை கைது செய்யவேண்டும்

இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Views: - 268

0

0