ஏரிகள் நிரம்பியதால் கிடா வெட்டி மக்கள் கொண்டாட்டம் : விரைவில் செயற்கை தீவு அமைக்கப்படும்.. அமைச்சர் துரைமுருகன் உறுதி!!
Author: Udayachandran RadhaKrishnan28 September 2021, 5:33 pm
வேலூர் : காட்பாடி ஏரி மற்றும் கழிஞ்சூர் ஏரிகளில் ரூ.25 கோடி மதிப்பில் செயற்கை தீவு ஏற்படுத்தப்பட்டு படகு சவாரிக்கு சுற்றுலா தளம் போல் மாற்றப்படும் என தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் கழிஞ்சூர் ஏரி நிரம்பி காங்கேய நல்லூர் ஏரிக்கு பாலாற்றில் இருந்து ஏரிக்கு தண்ணீரானது திருப்பிவிடப்பட்டது. கடந்த ஒருவார காலத்தில் இந்த ஏரியானது நிரம்பி முழு கொள்ளவை எட்டி கடைவாயிலில் (கோடி நிரம்பி) சென்றதால் அந்த நீரை காங்கேய நல்லூர் ஏரிக்கு செல்லும் பாதையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மலர்தூவி வரவேற்றார்.
இந்த விழாவில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்,வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், பாலாற்றில் நீர் பெருக்கெடுத்து வருகிறது . அந்த நீர் ஏற்கனவே கால்வாய் வெட்டப்பட்ட காரணத்தால் இந்த கழிஞ்சூர் ஏரியும் காட்பாடி ஏரியும் நிரம்புகிறது.
வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆகையால் சாலையை கடந்து மக்கள் செல்லும் இடம் தரைபாலமாக உள்ளதால் மேல் உயர்ந்த பாலமாக கட்டி தரப்படும் என்றும், கழிஞ்சூர் ஏரியில் தண்ணீர் எடுத்து பாசனம் செய்தனர் .ஆனால் இப்போது பாசனம் கிடையாது ஏரியில் நீர் ஊறுவதால் உப்பு தண்ணீர் நல்ல தண்ணியாக மாறுகிறது என்றார்.
மேலும் இதை இப்படியே விட்டால் பொது மக்களுக்கு பயனிருக்காது, இதனால் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து கரைகளை சுத்தபடுத்தி ஏரிகளில் மாலை நேரத்தில் படகு சவாரி செய்வதை போல் உருவாக்கினால் மக்களுக்கு பொழுது போக்காக அமையும்.
காலையில் நடைபயிற்சி செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும் எனவே இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கி இரண்டு ஏரிகளையும் மாற்றியமைக்க உத்தரவிட்டுள்ளேன். அடுத்த ஆண்டு படகு சாவரிகள் இந்த இரண்டு ஏரிகளிலும் துவங்கும் என்று பேசினார்
இந்த ஏரி நிரம்பியதால் மக்கள் குழந்தைகளும் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்வதுடன் சிறுவர்களும் நீரில் குளித்து விளையாடி மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். தொடர்ந்து பாலாற்றில் நீர் வருவதால் வேலூர் மாவட்டத்தில் பல ஏரிகள் நிரம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அப்பகுதி பொதுமக்கள் ஏரியின் அருகே ஆடு வெட்டி பிரார்த்தனை செய்தனர்
0
0