சட்டமன்ற தேர்தல் எதிரொலி : தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை!!!
2 March 2021, 10:40 amQuick Share
திண்டுக்கல் : கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய சுற்றுலா தலமான கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளான கலையரங்கம் பகுதி, எரிச்சாலை, அண்ணாசாலை, நாயுடுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Views: - 1
0
0