ச.ம.க., தலைமையில் 3வது அணி அமையவும் வாய்ப்புண்டு : சரத்குமார் அதிரடி அறிவிப்பு..!!

3 February 2021, 3:40 pm
sarath kumar - updatenews360
Quick Share

சென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தலைமையில் 3வது அணி அமையவும் வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சென்னை மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை வியாசர்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, சரத்குமார் பேசியதாவது :- வேல் என்பது தற்போது அரசின் சின்னமாக மாறிவிட்டது. நான் கடந்த 10 வருடமாக சிறிய அளவு வேல் என் பாக்கெட்டில் இருக்கும். இப்போது நான் எடுத்து காண்பித்தால் சரத்குமாரும் வேல் கையில் எடுத்து விட்டார் என்று கூறுவார்கள்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் கூறியதாவது :- கூட்டணியில் எங்களுக்கு ஒரு சீட்டு, இரண்டு சீட்டு, 3 சீட்டு என்று ஒதுக்கினால் நாங்கள் நிற்க மாட்டோம். மேலும், எங்களுக்கு எதிர்பார்த்த சீட்டு கிடைக்கவில்லை என்றால் எனது தலைமையில் மூன்றாவது அணி அமைவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. மதத்தால் அரசியல் நடத்த வேண்டாம் என அனைவரையும் நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மதம், ஜாதியை வைத்து அரசியல் செய்பவர்களை பிரதமர் அவர்கள் தடுப்பார் என நான் நம்புகிறேன். இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கு சட்டம் இயற்றினால் நல்லா இருக்கும் என்று நான் கருதுகிறேன், எனக் கூறினார்.

Views: - 1

0

0