காவல் உதவி ஆய்வாளரின் கார், பைக்குக்கு தீ வைப்பு : தப்பியோடிய இரு இளைஞர்களை தேடும் போலீசார்!

3 July 2021, 9:51 am
SI House Fire 1- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : களியக்காவிளை காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி கார், பைக் எரித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குமரி மாவட்டம் புத்தன் சந்தை அருகே இடைக்கோடு பகுதியில் களியக்காவிளை காவல்நிலைய சிறப்பு உதவியாளர் செலின் குமார் வீட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர்.

இவரது வீட்டில் வளர்த்து வந்த நாய்க்கு விஷம் வைத்து கொலை செய்து ஒரு மாதம் ஆகிய நிலையில் ஒரு காவல் துறை சிறப்பு உதவியாளர் வீட்டில் நடந்த இந்த சம்பவம் குமரி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

குழித்துறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் வந்து தீயை அணைத்த நிலையில் அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 244

0

0