அட்லீ – ஷாருக்கான் இணையும் படத்தின் டைட்டில் ‘லயன்’?: இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!!

Author: Aarthi Sivakumar
16 September 2021, 11:26 am
Quick Share

அட்லீ – ஷாருக்கான் இணையும் படத்திற்கு ‘லயன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இணையத்தில் வைரல் ஆகும் கடிதம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘பிகில்’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தியுள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்கும் அட்லீ கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

Image

இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா, ‘தங்கல்’ படத்தில் நடித்த சான்யா மல்ஹோத்ரா ஆகியோர் நடிக்கிறார்கள். புனேவில் கடந்தவாரம் தொடங்கிய படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்டோர் இணைந்தனர். யோகி பாபு இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், படத்திற்கு ‘லயன்’ என பெயர் சூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இணையத்தில் இந்தப் படம் தொடர்பாக அறிக்கை வெளியாகியிருக்கிறது. அது ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாண்ட் துக்காராம் மெட்ரோ ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி எழுதப்பட்ட கடிதத்தின் நகல் தான் அது. அந்த கடிதத்தில் தான் படித்தின் பெயர், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், நடிகர்கள், இயக்குநர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

நயன்தாரா நடிப்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Views: - 262

1

0