பெட்ரோல் பங்க் ஊழியர்களை சரமாரியாக தாக்கிய இளைஞா கும்பல் : 3 பேர் படுகாயம் : பரபரப்பு சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2021, 2:04 pm
Petrol Bunk Staff Attacked -Updatenews360
Quick Share

கேரளா : திருவனந்தபுரம் அருகே பெட்ரோல் பங்கில் செல்போன் பேசிய இளைஞரின் பைக் சாவியை பிடுங்கிய ஊழியரை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாங்கோடு, கல்லறா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட வந்த ஒருவர் மொபைலில் பேசியவாறு இருந்ததால் அங்கிருந்த ஊழியர்களுக்கும் பெட்ரோல் போட வந்த நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து இருசக்கர வாகனத்தின் சாவியை ஊழியர்கள் எடுத்ததால் இருசக்கர வாகனத்தை அங்கு வைத்து சென்றார். இதையடுத்து தனது நண்பர்களுக்கு தகவலை கொடுக்கவே அவரது நண்பர்கள் சுமார் 10 க்கும் மேற்பட்டோர் கும்பலாக வந்து அங்கு பணி புரிந்த ஊழியர்கள் ஹரி கிருஷ்ணன், அனிஷ்,சுராஜ் என்பவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் காயமடைந்தவர்கள் நெடுமாங்கடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாங்கோடு காவல் நிலைய போலீசார் அங்கு பதிவாகி இருந்த சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சி சி டி வி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது,

Views: - 447

0

0