நோயாளிகளை மதம் மாற்ற முயற்சி.. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்.!!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2024, 8:47 am

நோயாளிகளை மதம் மாற்ற முயற்சி.. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்.!!

கோவை சிங்காநல்லூர் பகுதியில் இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோட்டு போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான உள் மற்றும் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.எஸ் புரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது தாய் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் தாயை உடன் இருந்து அவர் பார்த்து வருகிறார். இந்நிலையில் உணவு அருந்த மருத்துவமனை வளாகத்திற்குள் நடந்து சென்று கொண்டு இருக்கும் போது 3 பெண்கள், ஒரு ஆண் என நான்கு பேர் மருத்துவமனை உள்ளே சென்று விட்டு பின்னர் முதல் பிளாக்கில் இருந்து அடுத்த பிளாக் பகுதியில் சென்று கொண்டு இருந்தனர்.

அவர்கள் பையில் புத்தகங்களை வைத்துக் கொண்டு அங்கு வரும் நோயாளிகளிடம் கொடுத்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் அங்கு சென்ற சந்தோஷ் இடமும் புத்தகத்தை வழங்கி உள்ளனர்.

மேலும் படிக்க: தொடங்கியது 5ஆம் கட்ட தேர்தல்.. 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு.. சிறையில் உள்ள CM மனைவி வெற்றி பெறுவாரா?

மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறி ஜெபம் செய்தோம் என்றால் தாய் விரைவில் குணம் அடைவார் என்றும் கூறி உள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் நாங்கள் பகவத்கீதையை கொடுத்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று அவர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து உள்ளார். அந்த காட்சிகள் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

மேலும் இதுகுறித்து அங்கு இருந்த காவலாளியிடம் எப்படி இவர்களை உள்ளே அனுமதித்தீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் உள்ளே வந்து விட்டனர் என்றும் உள்ளே வருபவர்களிடம் அவர்கள் கொண்டுவரும் பைகளை சோதனை செய்வதில்லை அதனால் அவர்கள் எப்படி வந்தார்கள் என்பது தெரியவில்லை என்றும் கூறி உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் நோயாளிகளிடம் மதமாற்றத்தில் ஈடுபட்ட கும்பல் பற்றி புகார் அளித்து உள்ளதாக கூறப்படுகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!