காவல் ஆய்வாளர் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி : மதுரையில் அதிர்ச்சி!!
7 February 2021, 12:51 pmமதுரை : வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரை காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக நந்தகுமார் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் நேற்று இரவு வழக்கம் போல் தெப்பக்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு காரை நிறுத்த ஆய்வாளர் நந்தகுமார் முயன்ற போது, சொகுசு காரில் வந்தவர்கள் நிற்காமல் நந்தகுமார் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளர்.
கார் மோதியதில் அவருக்கு தலை கால் மற்றும் முழங்கை ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சக காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நந்தகுமார் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு காரை தேடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். காவல் ஆய்வாளரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0