கோவையில் யானை தந்தத்தை விற்பனை செய்ய முயற்சி : இரண்டு பேர் கைது!!

16 February 2021, 7:40 pm
Elephant Trunk Arrest - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் பெண் யானையின் தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை வேட்டைக்காரன்புதூர் அருகே உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் இறந்த பெண் யானையின் தந்தத்தை சிலர் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சேத்துமடை பகுதியைச் சேர்ந்த மணியன் என்பவரும் மோகன்ராஜ் என்பவரும் யானையின் தந்தத்தை வைத்திருந்தது தெரியவந்தது.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பூத்த மடை என்ற பகுதியில் பெண் யானை ஒன்று இறந்த நிலையில் இருந்ததாகவும் அந்த யானையின் தந்தத்தை எடுத்து விற்பனை செய்ய வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

மேலும், யானை இறந்திருப்பதை வனத்துறை அலுவலகத்திற்கு அறிக்கை செய்யாத களப்பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், வனப் பகுதிக்குள் உள்ள வீடுகளில் சோதனை செய்து தவறுகள் இருக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 36

0

0