கொலை வழக்கு சாட்சியை கொலை செய்ய முயற்சி : 2 பேர் கைது!!

11 October 2020, 11:06 am
Pondy Murder Atempt - Updatenews360
Quick Share

புதுச்சேரி : கொலை வழக்கின் நேரடி சாட்சியை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் வானூர் போலிசார் மேலும் 2 பேரை கைது செய்தனர்

புதுச்சேரி ஐயங்குட்டி பாளையம் அமைதி நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். இவர் கடந்த 5 ம் தேதி இரவு தமிழக பகுதியில் கடத்தப்பட்டதாக அவரது தாயார் புவனேஸ்வரி வானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்த வானூர் போலீசார் அரவிந்தை தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் கடத்தப்பட்ட அரவிந்த் புதுச்சேரி வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் வெட்டுப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே வானூர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அரவிந்தை கடத்தி சென்றது புதுச்சேரி குருமாம்பேட் பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் என தெரியவந்ததை அடுத்து பூத்துறையில் உள்ள ஒரு செம்மன் குவாரியில் பதுங்கி இருந்த ராஜேஷ் மற்றும் அவனின் கூட்டாளிகளை போலிசார் பிடிக்க சென்றனர்.

ஆனால் அப்போது ராஜேஷ் மற்றும் கார்த்தி ஆகிய இருவர் மட்டுமே பிடிப்பட்டனர். அவருடன் இருந்த 2 பேர் போலிசாரை பார்த்த உடன் தப்பி ஒடி விட்டனர், இச்சம்பவம் குறித்து போலீசார் ராஜேஷிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தன் அண்ணனான ரவுடி ஜெகன் கொலைக்கு பழிக்கு பழியாக கார்த்தி என்கிற கொஃப்பு கார்த்தியை படுகொலை செய்த வழக்கில் அரவிந்த தான் நேரடி சாட்சி என்பதால் அரவிந்தை கொலை செய்ய திட்டம் தீட்டி அவனை கடத்தி சென்றதாக ராஜேஷ் ஒப்புகொண்டான்.

இதை அடுத்து ராஜேஷ் மற்றும் கார்த்தியை சிறையில் அடைத்த போலிசார் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெரியார் நகரை சேர்ந்த கெஸ்தான் பஸ்கல் மற்றும் முரளிராஜாவை தேடி வந்த நிலையில் கொண்டல்ங்குப்பம் கூட்ரோடு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி பிடித்தனர்.

அப்போது போலிசாரை பார்த்த உடன் தப்பிக்க முயற்சித்த கெஸ்தான் பஸ்கல் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து அவரை மருத்துவமனை அழைத்து சென்று சிகிச்சை அளித்து காவல் நிலையம் அழைத்து வந்த போலிசார்
அவர்களிடமிருந்து வாகனம் மற்றும் அறிவாள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து கெஸ்தன் பஸ்கல் மற்றும் முரளிராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் ராஜேஷை போலிசார் பிடிக்க முயன்றபோது அவர் தப்பிக்க முயற்சித்து பத்து அடி பள்ளத்தில் விழுந்து காலில் முறிவு ஏற்ப்பட்டது குறிப்பிடதக்கது.

Views: - 3

0

0