திருப்பூர் தொழிலதிபரிடம் ரூ.1 கோடி கொள்ளை முயற்சி: சிக்கிய திமுக நிர்வாகி…விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..!!

Author: Aarthi Sivakumar
7 January 2022, 3:14 pm
Quick Share

சென்னை : திருப்பூர் தொழிலதிபரிடம் 1 கோடி ரூபாய் கொள்ளையடிக்க முயற்சி செய்த தி.மு.க., பிரமுகரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்தவர் குமார். தொழிலதிபரான இவருக்கு சென்னை திரு.வி.க., நகர் தி.மு.க., பிரதிநிதியான சென்னை, நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. குமாரிடம் இருந்த கணக்கில் காட்டாத 5 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை, வெள்ளையாக மாற்றி தருவதாக சங்கர் கூறியுள்ளார்.

முதற்கட்டமாக 1 கோடி ரூபாய் பணத்துடன் குமார் இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வந்துள்ளார்.
அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணத்தை மாற்றுவதற்காக அண்ணா நகர் 3வது பிரதான சாலை மற்றும் நியூ ஆவடி சாலை சந்திப்பில் சங்கரும், குமாரும் நேற்று காத்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல், குமார் பணம் வைத்திருந்த பையை பறிக்க முயற்சித்தனர். குமார் கூச்சலிட்டதால் கொள்ளைக் கும்பலுடன் சேர்ந்து சங்கரும் தப்பி ஓடினார். இதனையடுத்து, அங்கிருந்த மக்கள் சங்கரை மட்டும் விரட்டிப் பிடித்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தி.மு.க., பிரமுகரான சங்கரும் அவரது கூட்டளி விஜய்குமாரும் சேர்ந்து குமாரிடம் இருந்த 1 கோடி ரூபாய் பணத்தை அபகரிக்க திட்டமிட்டு இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சங்கர் கைது செய்யப்பட்டார். நண்பர் போல பழகி ரூ.1 கோடியை கொள்ளைடியக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 604

0

0