பூட்டிய கடைக்குள் கொள்ளையன்…சிசிடிவி காட்சியால் அதிர்ந்த உரிமையாளர்: மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைப்பு..!!

Author: Aarthi Sivakumar
19 October 2021, 11:24 am
Quick Share

கோவை: கோவையில் கணினி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்த கொள்ளையனை கடை உரிமையாளரும், பத்திரிகையாளர் ஒருவரும் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

நீலம்பூரில் வசிப்பவர் சித்திக். இவர் சித்ரா அருகே கம்ப்யூட்டர் சேல்ஸ்-சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது கடையில் சிசிடிவி கேமரா பொருத்தி உள்ளார். இது அவரது செல்போனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 4 மணி அளவில் சித்திக் யூசுப் தனது செல்போனை பார்த்துள்ளார். அப்போது அவரது கடைக்குள் ஒரு ஆசாமி நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அதே பகுதியில் வசிக்கும், தனது நண்பரான பிரபல ஆங்கில பத்திரிகை செய்தியாளர் வில்சன் என்பவருடன் காரில் சித்ரா வந்தனர். அப்போது அந்த ஆசாமி கடைக்குள் பணம் எதுவும் கிடைக்காததால் பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளார்.

அங்கு வந்த அரசு பேருந்தில் ஏறிய போது, சித்திக்கும் வில்சனும் அவரை அடையாளம் கண்டு அந்த ஆசாமியை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அந்த ஆசாமி தான் வைத்திருந்த கூர்மையான இரும்பு ஆயுதத்தால் அவர்களை தாக்க முயன்றுள்ளார்.

சுதாரித்துக் கொண்ட இருவரும், திருட்டு ஆசாமியை மடக்கிப் பிடித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையனை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த பத்திரிகையாளர் வில்சன், கடையின் உரிமையாளர் சித்திக் ஆகியோரை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

Views: - 245

0

0