கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி….குழந்தை பலியான சோகம்!!….

By: Aarthi
10 October 2020, 9:35 am
sucide - updatenews360
Quick Share

வேலூர்: கணவர் இறந்த துயரம் தாங்க முடியாமல் 2 குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை முயற்சி செய்ததில், பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் தோட்டப் பாளையம் எட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நரேஷ்குமார். இவருடைய மனைவி கோமதி. இவர்களுக்கு நித்தில்குமார் என்ற மகனும், ரியாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் நெஞ்சுவலி காரணமாக நரேஷ்குமார் உயிரிழந்தார்.

கணவர் இறந்த துக்கத்தில் கோமதி மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்த கோமதி, வீட்டில் இருந்த கொசுமருந்தை தனது குழந்தைகளுக்கு கொடுத்து, தானும் குடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து வீட்டில் மயங்கி கிடந்த 3 பேரையும் உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 வயது குழந்தை ரியாஸ்ரீ உயிரிழந்தார்.

கோமதியும் அவரது மகனும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தற்கொலை முயற்சிக்கு முன் கோமதி உருக்கமாக எழுதியுள்ள கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க. என்னால அவர் இல்லாமல் வாழ முடியவில்லை. சின்ன சின்ன விஷயம் அவரை ஞாபகப்படுத்துகிறது. அவர் இல்லாத வாழ்க்கையை என்னால சத்தியமாக வாழ முடியாது. அவர்தான் எங்க உலகமே. அவர் யாருக்குமே கஷ்டம் கொடுக்காம வாழனும்னு சொல்லுவாரு. அதனால நானும் என் 2 பிள்ளைகளும் யாருக்கும் கஷ்டம் கொடுக்காம சந்தோசமா மேலோகத்தில் வாழப்போறோம் என எழுதியுள்ளார்.

இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தோட்டப்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Views: - 53

0

0