“ஃபோன வைய்யுடா ம…..று“! திமுகவின் ஆள்சேர்க்கும் திட்டத்தை கழுவி ஊற்றிய பெண்ணின் ஆடியோ!!

2 November 2020, 8:27 pm
Stalin Audio - Updatenews360
Quick Share

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கவுள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் படு தீவிரமாக இறங்கியுள்ளனர்.

ஒரு பக்கம் அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்ததுடன், பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றனர். மறுபக்கம் திமுகவோ ஆள்சேர்க்கும் படலத்தை ஆரம்பித்து கட்சிக்கு உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க படாதபாடு பட்டு வருகிறது.

குறிப்பாக எல்லோரும் நம்முடன் என்ற ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை ஆரம்பித்து, அதில் ஏகப்பட்ட மோசடிகள், எராளமான குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் மனம் தளராத திமுக தொடர்ந்து அவமானங்களையே சந்தித்து வருகிறது.

DMK is not anti-Hindu, says Stalin: Lists out things done by Karunanidhi  for Hindus | The News Minute

எல்லோரும் நம்முடன் என கூறி ஆள்சேர்க்கும் திமுக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் வரை “நம்முடன்“ என நினைத்து உறுப்பினர் அட்டை கொடுத்தது வேற லெவல். இந்த பிரச்சனையில், மக்களிடமே திமுகவினர் கேட்டு வாங்கிக்கட்டிக்கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட ஒரு ஆடியோவில் பேசிய திமுகவினர் ஒருவர், ஒரு செல்போன் நம்பருக்கு கால் செய்து, அந்த செல்போன் நம்பருக்குரியவரின் பெயரை சொல்லி, அது நீங்கள்தானா என கேட்கிறார். ஆனால் மறுமுனையில் பேசிய பெண், ஒருவர் நீங்கள் யார், யார் வேண்டும், என வினவுகிறார்.

Ellorum Nammudan - Register Now

அவர் நான் ஸ்டாலின் அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன், உங்கள் நம்பரை ராஜலட்சுமி (எ) யமுனா என்கிற பெண் திமுக உறுப்பினராக இணைத்துள்ளார், அதை உறுதி செய்யவேண்டும் என கூறுகிறார். அதற்கு மறு முனையில் பேசிய பெண் என் சார் இவளோ கேவளமா இருக்கீங்க, இந்த நம்பர் வாங்கி 19 வருடம் ஆகிறது.

இல்லாத ஒரு பெயரை இருக்கு என சொல்லி இப்படி உறுப்பினராக சேர்க்க திமுகவுக்கு கேவளமாக இல்லையா என சொல்ல, அந்த நபரோ தேவையில்லாமல் பேசாதீங்க என சொல்லுகிறார். ஆனால் அந்த பெண் போனை வைய்யுடா மயிறு என திட்டிவிட்டு போனை கட் செய்கிறார். இந்த ஆடியோவில் பேசிய நபர் தன்னை திமுக ஸ்டாலின் அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன் என கூறியுள்ளார். இந்த ஆடியோ டிவிட்டரில் அதிகம் பகிர, நெட்டிசன்கள் திமுகவை கண்டபடி திட்டி வருகின்றனர்.

ஏதோ மார்க்கெட்டிங் கம்பெனி போல, கிரெடிட் வாங்கறீங்களா, சிம் வாங்கறீங்களா என்ற ரேஞ்சுக்கு திமுக தரைமட்டமாக இறங்கி ஆள் சேர்ப்பது திமுக உடன்பிறப்புகளிடையே கலக்கத்தையும், கட்சிக்கு கலகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 29

0

0