குடிபோதையில் குடும்பத் தகராறு : ‘கிரிக்கெட் பேட்‘டால் ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை!!

28 September 2020, 7:09 pm
Chennai Murder - updatenews360
Quick Share

சென்னை : வியாசர்பாடியில் குடும்பத் தகராறு காரணமாக குடிபோதையில் அடிதடியில் ஈடுபட்ட போது ஆட்டோ ஓட்டுநரை இரண்டு பேர் சேர்ந்து கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்தனர்.

சென்னை வியாசர்பாடி சஞ்சய் நகர் 6 வது தெருவில் வசிப்பவர் வடிவேல் (எ) அப்புனுராஜ் (வயது 40) . இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் 3 பெண்களை திருமணம் செய்து தனித் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தேவி என்ற மனைவி பிரிந்து சென்ற நிலையில் , நேற்று சரண்யா மற்றும் சந்தியா இருவரும் அப்புனுராஜ்டன் கருத்து வேறுபாடு காரணமாக சண்டையிட்டனர்.

வேலுச்சாமி மற்றும் அவரது மகன் ரவீஸ்வரன் ஆகியோர் தான் காரணம் என கூறி இன்று அவர்களுடன் அப்புனுராஜ் சண்டையிட்டுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த 3 பேரும் பலமாக மோதி கொண்டனர். அப்போது அருகில் இருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து ரவீஸ்வரன் மற்றும் வேலுச்சாமி இருவரும் சேர்ந்து அப்புனுராஜை பலமாக தலையில் தாக்கியுள்ளனர்

இதில் சம்பவ இடத்திலேயே அப்புனுராஜ் உயிரிழந்தார். இதனையெடுத்து வேலுச்சாமி , ரவீஸ்வரன் இருவரும் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் , ஏற்கனவே அப்புனுராஜ் மீது வடபழனி காவல் நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கொலை வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.