லாரியை ‘ஓவர் டேக்‘ செய்ய முயன்ற ஆட்டோ : லாரி சக்கரத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த கோரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2021, 3:44 pm
Auto Dead- Updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி : லாரியை முந்தி செல்ல முயன்ற ஆட்டோ லாரியில் சிக்கி விபத்துக்குள்ளானதால் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி ஆலத்தூர் இந்தியன் பேங்க் அருகில் இன்று 30.06.2021 ஆம் தேதி 12.15 மணிக்கு கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் மார்கமாக ராம்கோ சிமெண்ட் ஏற்றிக்கொண்டு லாரி சென்றது.

லாரியின் பின்னால் வந்த ஆட்டோ, லாரியை முந்தி செல்ல முற்படும் போது எதிர்பாராத விதமாக லாரியின் வளது முன்புற பகுதியில் மோதி லாரியில் ஆட்டோ மாட்டிக்கொண்டது.

இதை கவனிக்காத லாரி ஓட்டுநர் வாகனத்த இயக்க ஆட்டோ இழுத்துச் சென்றதில் ஆட்டோவில் சென்ற ஓட்டுநர் மணிகண்டன் ( வயது 35) லாரி சக்கரத்தில் சிக்கி உடல் துண்டு துண்டானது. மேலும் பயணித்த சரவணன் (வயது 35), ராஜேந்திரன் (வயது 42) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடம் விரைந்து உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்

Views: - 399

0

0