வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை: பயன்பாட்டுக்கு வந்தது ANPR கேமராக்கள்! மிஸ் ஆகவே முடியாது

1 March 2021, 1:18 pm
Automatic number plate reader cameras installed in five locations in Trichy
Quick Share

திருச்சி நகர காவல்துறை, ஐந்து இடங்களில் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க கண்காணிப்பு கேமராக்களைப் பயன்படுத்தும் ஒரு புதிய முறையை அமல்படுத்தியுள்ளது.

வாகனத்தில் செல்பவர்கள் போக்குவரத்து விதிகளை மீறும்போது வாகன உரிமையாளர்களுக்கு விதிமீறல் மற்றும் அந்த விதிமீறலுக்கான அபராதம் குறித்த தகவல்கள் குறுஞ்செய்தியாக அவரின் போன் எண்ணுக்கு அனுப்பப்படும்.

திருச்சியில் கலெக்டர் அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை ஜங்க்ஷன், தலைமை தபால் நிலைய சிக்னல், திருவனைகோயில் சந்திப்பு மற்றும் மெயின்கார்டு கேட் ஆகிய நகரின் ஐந்து இடங்களில் இந்த Automatic Number Plate Reader என்னும் தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் (ANPR) கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

விதிகளை மீறும் வாகனங்களை இந்த ANPR கேமராக்கள் கண்டுபிடிக்கும். கேமரா வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளை படம்பிடித்து நகர காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும்.

மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன், வாகனத்தின் உரிமையாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

“நாங்கள் ஒரு நாளைக்கு 1,000 வழக்குகளை ANPR கேமராக்களின் உதவியோடு பதிவு செய்கிறோம். ஹெல்மெட் இல்லாமல் சவாரி செய்பவர்கள் மீது மட்டும் இப்போது கவனம் செலுத்தப்படுகிறது. பிற விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்க விரைவில் மென்பொருளை மேம்படுத்தவுள்ளோம்” என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருச்சி நகர போலீஸ் கமிஷனர் ஜே லோகநாதன் அவர்கள் கூறுகையில் ANPR கேமராக்களின் சோதனை ஓட்டம் கண்காணிக்கப்பட்டு மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

Views: - 522

1

0