ஆவின் அதிகாரிகள் 34 பேர் பணியிட மாற்றம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

18 July 2021, 5:04 pm
Quick Share

தமிழகம் முழுவதும் 34 ஆவின் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊழல் புகார் முறைகேடு காரணமாக ஆவின் நிறுவனத்தில் 34 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் புகாரில் சிக்கியுள்ள சென்னை மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் ரமேஷ்குமார் விழுப்புரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பால் விநியோகம் செய்ததில் கமிஷன் பெற்றதால் ஆவினுக்கு ரூபாய் 45 கோடி இழப்பு ஏற்படுத்திய புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நெருக்கமானவர்கள் உயர்பதவி அமர்த்தப்பட்டு கூட்டுக் கொள்ளை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2017-18 காலகட்டத்தில் ஆவினில் ரூ.4.30 லட்சத்துக்கு பட்டாசு வியாபாரம் செய்துள்ளார் ராஜேந்திர பாலாஜி அதனை மாதாமாதம் பிடித்தம் செய்து உள்ளார் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆவின் நிறுவன அதிகாரிகள் 34 பேர் இடமாற்றம் செய்யப்பட்டது மூலம் நிர்வாகத்தை வலுப்படுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.முன்னதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு பிரிவில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Views: - 69

0

0