அலட்சியம்..அஜாக்கிரதை.. சரக்கு வாகனம் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய சொகுசு கார் : பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2022, 11:07 am
Tiruppur Accident - Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனமும், சொகுசு காரும் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தயுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொல்லிக்காளிபாளையம் பகுதியில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் ஒன்று பொங்கலூரில் உள்ள அரிசி மண்டிக்கு மூட்டைகளை இறக்க வந்தது.

சரக்கு வாகனத்தை பொங்கலூரை சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டி வந்தார். பொங்கலூரில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்திய ஓட்டுனர் பின்புறம் வாகனம் வருவதை அறியாமல் வலது புறம் திருப்பியுள்ளார்.

அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சொகுசு காரில் வந்த திருச்சியை சேர்ந்த சம்சுதீன், ரியாஸ், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த கணேசனும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தினை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியா அவினாசிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடம் வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வாகனங்களை அங்கிருந்து அப்புற படுத்தினர்.இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 736

0

0