தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய அய்யலூர் ஆட்டுச் சந்தை : ரூ.3 கோடி வரை விற்பனையான ஆடுகள்!!
Author: Udayachandran RadhaKrishnan28 October 2021, 11:54 am
திண்டுக்கல் : ஆடு கோழிகள் வரத்து அதிகரித்த நிலையில் விலை குறைந்து காணப்பட்டாலும் அய்யலூர் ஆட்டுச் சந்தையில் மூன்று கோடி ரூபாய் வரை விலை போனது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் என்ற ஊரில் செயல்பட்டுவரும் தனியாருக்குச் சொந்தமான வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு காய்கறிகள் பலசரக்கு சாமான்கள் மட்டுமல்லாமல் பிரசித்தி பெற்ற ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இதில் கடந்த சில மாதங்களாக பருவமழை காரணமாக ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்து வந்த நிலையில் வருகிற வியாழனன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகள் வந்து குவிந்தன.
பண்டிகை நாள் என்பதால் ஆடு கோழிகள் வரத்து அதிகரித்து விலை மந்தமாக இருந்தது. ஆடு கோழிகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை இருந்த நிலையில் சுமார் 7000 ஆடு கோழிகள் விற்பனை ஆகியது.
மூவாயிரத்துக்கு விற்பனையாகும் ஆட்டுக்குட்டி இரண்டாயிரத்து 500 ரூபாய்க்கும் 10 ஆயிரத்திற்கு விற்பனையாகும். ஆடுகள் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விற்பனை ஆகிய நிலையில் சந்தை முடியும் தருவாயில் சுமார் மூன்று கோடியை எட்டியது வியாபாரிகள் மற்றும் இறைச்சி கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
0
0