கோவை அரசு மருத்துவமனை கழிவறையில் குழந்தையின் சடலம்! ஊழியர்கள் “ஷாக்“!!

30 November 2020, 3:56 pm
Cbe GH - Updatenews360
Quick Share

கோவை : அரசு மருத்துவமனையில் உள்ள கழிவறையில் இறந்த நிலையில் பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ‘ரெட் ஜோனில்’ இருக்கும் கழிவறையில் இறந்த நிலையில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து அக்குழந்தையின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் கழிவறையிலிருந்து மீட்டனர். பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்தப் பெண் குழந்தை விபத்து மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவு கழிவறையில் எப்படி வந்தது? யாருடைய குழந்தை ? என பல்வேறு கட்டங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0