பக்ரீத் பண்டிகை: கோவையில் சிறப்பு தொழுகையுடன் கொண்டாடிய இஸ்லாமியர்கள்..!!

21 July 2021, 10:33 am
Quick Share

கோவை: பக்ரீத் பண்டிகையான இன்று இஸ்லாமிய மக்கள் இன்று கோவை அத்தார் ஜமாத் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடத்தினர்.

இஸ்லாமிய மக்களின் பண்டிகையான பக்ரீத் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படும் இந்த பண்டிக்கையின் ஒரு பகுதியாக கோவையில் இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து அத்தார் ஜமாத் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடத்தினர்.

கொரோனா ஊரடங்கால் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜமாத்தில் கொண்டாடப்படும் பண்டிகை என்பதால் இஸ்லாமிய மக்கள் உற்சாகத்துடன், முகக்கவசம் அணிந்து தொழுகையில் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து குர்பானி என்பட்டும் நிகழ்வு மூலம் ஆடு அல்லது மாட்டினை இறவனுக்கு படைத்து வழிபாடு நடத்த உள்ளதாக தொழுகையில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 142

0

0