தடை விதித்தால் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்: ஹெச்.ராஜா பேட்டி

Author: Udayaraman
1 August 2021, 5:57 pm
Quick Share

தஞ்சை: உண்ணாவிரத போராட்டத்திற்கு தடை விதித்தால், தடை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தஞ்சையில் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் இன்று செய்தியாளர்களை முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது தான் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் சமூக நீதிக்காக வெளி வேஷம் போடுகிறார்கள். ஆனால் உண்மையான சமூக நீதியை செயல் படுத்திக் கொண்டிருப்பது பாரதிய ஜனதா கட்சிதான் என்றார். மேகதாது விவகாரத்தில், மத்திய சர்க்கார் அனுமதி கொடுக்கவில்லை என அறிவித்துள்ளது. எங்களுக்கு விண்ணப்பமே வரவில்லை என தெரிவித்துள்ளது. அதனால் பயப்பட தேவையில்லை,

ஆனால் தமிழக விவசாயிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். வருமுன் காப்பதற்காகவும், இது ஒரு தடுப்பு நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்தார். டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக என்றும், குத்திய நபர் கருணாநிதி எனவும் கூறிய ராஜா, உண்ணாவிரத போராட்டத்திற்கு தடை விதித்தால், தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும், தடை விதித்தால் விவசாயிகளின் துரோகி திமுக என்று நிரூபணம் ஆகி விடும் என அவர் தெரிவித்தார். கல்வி, கயவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பாடநூல் தலைவர் கோமாளி லியோனி, சுப.வீரபாண்டியன் ஆகிய மூவரையும் உடனடியாக நீக்க வேண்டும்,

இது போன்ற ஜந்துக்களை நியமிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என அவர் தெரிவித்தார். மேலும் ஹெலிகாப்டர் சகோதரர்கள் வழக்கில் ஆதாரம் இருக்கா என கேள்வி எழுப்பியவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் மீது பல்வேறு புகார்கள் இருப்பதாகவும், அவர் பலபேரை மிரட்டி பணம் பறிப்பதாகவும் குற்றம் சாட்டினார். பொறுப்பற்ற முதலமைச்சரான பினராயி விஜயனால், கொரோனா பாதிப்பில், கேரளா முதலிடத்தில் இருப்பதாக குற்றம்சாட்டியவர், திமுக ஆட்சி ஒரு ஏமாற்று சர்க்கார் என அவர் தெரிவித்தார்.

Views: - 99

0

0