நீலிகிரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை : ஆட்சியர் அறிவிப்பு!

31 December 2020, 6:29 pm
Nilgiri New year -Updatenews360
Quick Share

நீலகிரி : சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து நீலகிரிக்கு வந்த 16 நபர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ,அவர்கள் மூலம் உறவினர்கள் 3 பேருக்கு கொரானா பரவியதால் இது உருமாறிய கொரோனா வைரஸா? என கண்டறிய இந்த ஐந்து நபர்களின் கொரோனா பரிசோதனையும் புனேவில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆய்வு அறிக்கைகள் கிடைத்தப் பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனறு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

மேலும் ற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Views: - 0

0

0