ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி : சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு !
Author: kavin kumar30 ஜனவரி 2022, 7:38 மணி
திருச்சி : திருச்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி தில்லைநகர் 10வது குறுக்கு தெருவில் இசாப் என்ற சிறு முதலீட்டு வங்கி உள்ளது. இதன் அருகில் அதன் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியின் மேலாளர் ராமானுஜம்(39) நேற்று பணிக்கு வந்த போது ஏடிஎம் இயந்திரத்தின் மானிட்டர் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் ஆய்வாளர் சிந்துநதி மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டு அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து, சிசிடிவியில் பதிவை வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட திருச்சி மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்த நஸ்ருதீன் என்பவரது மகன் அசாரூதீன்(20) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் அவரை துறையூர் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.
0
0