மாவட்ட தலைவர்களுக்கு எதிராக காங்கிரசார் போர்க்கொடி : காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றச்சாட்டு…

Author: kavin kumar
30 January 2022, 8:06 pm
Quick Share

திருச்சி : சீட்டு ஒதுக்கீடு விவகாரத்தில் மாவட்ட தலைவர்களுக்கு எதிராக திருச்சியில் காங்கிரசார் போர்க்கொடி தூக்கியுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சீட்டு ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக திருச்சி அருணாச்சல மன்ற அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் , முன்னாள் மேயர் சுஜாதா, மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன், பஞ்சாயத் ராஜ் சங்கதன் மாநில உறுப்பினர் சேர்க்கை தலைவர் அண்ணாதுரை, திலகர் மாவட்ட செயலாளர் ஆர். ஆர்., சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் மன்சூர் அலி , முன்னாள் கவுன்சிலர் ஹேமா ,காளீஸ்வரி மற்றும் ஜெகதீஸ்வரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் நிர்வாகிகள் பேசியதாவது:- நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. திருச்சி மாநகராட்சியில் வார்டு ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குழு உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமல் மாவட்ட தலைவர்கள் தன்னிச்சையாக பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர். மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தைக்கு நியமிக்கப்பட்ட குழுவினரின் ஒப்பந்தம் இல்லாமல் கையெழுத்திட முடியாது என தெளிவாக கூறியுள்ளார்.

ஆகவே திருச்சி மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுகள் தொடர்பாக வரும் தகவலை கட்சியினர் யாரும் நம்ப வேண்டாம். குழு தலைவர் திருநாவுக்கரசு நாளைக்கு பேச்சுவார்த்தை நடத்த வருவதாக சொல்லி இருக்கிறார். நீண்ட பாரம்பரியம் மிக்க திருச்சி மாநகராட்சி, நகராட்சியாக இருந்த காலத்தில் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இருந்து வந்தனர். மாநகராட்சியாக மாற்றப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட 4 தேர்தல்களில் மூன்று முறை காங்கிரஸ் மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

Views: - 1212

0

0