சாலையில் கிடந்த கட்டு கட்டா நோட்டு கட்டு : சிதறிக் கிடந்த ரூ.14 லட்சத்தை அள்ளிய மக்கள்… ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் கொடுத்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2022, 12:53 pm
Vellore Fake Note - Updatenews360
Quick Share

வேலூரில் சாலையோரத்தில் வீசப்பட்டு கிடந்த 500 ரூபாய் கட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் கொண்டவட்டம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் உள்ள புதரில் ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், 500 ரூபாய் கட்டுகளாக வீசப்பட்டு கிடந்தது.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் பண ஆசையில் ரூபாய் நோட்டுகளை அள்ளி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பள்ளிகொண்டா சுங்கச்சாவடி ஊழியர்கள், பணத்தை எடுத்தவர்களை தடுத்து நிறுத்தி, போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பண கட்டுக்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அது அனைத்து ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ளநோட்டுகள் என கண்டுபிடிக்கப்பட்டது.

அனைத்து நோட்டுகளிலும் சீரியல் எண்கள் 00 என உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த கள்ள நோட்டுகளை தயாரித்து வீசியது யார் என சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் பள்ளிகொண்டா அருகே 14 கோடி ரூபாய் ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டிருக்கும் நிலையில் நேற்று கொணவட்டம் பகுதியில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டு இருப்பது வேலூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Views: - 783

0

0