ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு லட்சக்கணக்கில் பேரம்: வாங்கிய பணத்தை வீதியில் வீசியெறிந்த பெண்…கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..!!

Author: Aarthi Sivakumar
19 October 2021, 1:58 pm
Quick Share

உளுந்துார்பேட்டை: துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்காக வாங்கிய 1 லட்சம் ரூபாயை போட்டியாளர் வீட்டின் முன் பெண் உறுப்பினர் வீசி விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நன்னாவரம் ஊராட்சிமன்றத் தலைவராக கலியமூர்த்தி வெற்றி பெற்றார். 9 வார்டுகளைக் கொண்ட இந்த ஊராட்சியில் துணைத் தலைவருக்கான போட்டி யில் ஆறுமுகம் மற்றும் சந்திரபாபு ஆகியோருக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

இதற்காக இரு தரப்பினரும் பணத்தை வாரி இறைத்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு உறுப்பினர் கை நீட்டி பணம் வாங்கியதை அறிந்த மற்றொரு போட்டியாளர், கை நீட்டி வாங்கியவரிடம் இரு இடங்களில் கை நீட்டி பணம் பெற்றது ஏன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து கை நீட்டி பணம் பெற்றதை, உரியவரிடமே கொண்டு சேர்க்க முயற்சிக்கிறார் அந்த உறுப்பினர். ஆனால் கொடுத்தவரோ பணத்தை பெற மறுத்து, கொடுத்தது கொடுத்ததாக இருக்கட்டும், வேண்டாம் என தெரிவித்தார். ஆனால் கை நீட்டி பணம் வாங்கியவர் திருப்பி எடுத்தவர மனமின்றி, கொடுத்தவரின் வீட்டுமுன்பு பணத்தை வீதியில் வீசிய றிந்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

latest tamil news

வெகுநேரமாகியும் பணத்தை எடுக்க யாரும் முன்வரவில்லை. பொதுமக்களுக்கு நடந்தவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து பணத்தை கொடுத்தவரே அதனை திருப்பி எடுத்துச் சென்றார். பலமணி நேரமாக ரோட்டில் ரூ.1லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 317

0

1