சார்ஜ் போடும் போது பேட்டரி வாகனம் வெடித்து விபத்து : வீட்டுக்குள் பரவிய தீ… விழுப்புரத்தில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2023, 4:27 pm

விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரத்தில் ஓட்டுனரான உத்திரகுமார் என்பவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் வாங்கிய எல்க்ட்ரிக் இருசக்கரவாகனத்தின் பேட்டரியை கழட்டி கொண்டு சென்று வீட்டு பிரிட்ச் உள்ள இடத்தில் சார்ச் போட்டுள்ளார்.

சார்ஜ் போட்ட அரை மணிநேரத்தில் பேட்டரி திடீரென வெடித்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் உத்திரகுமாரின் மாமியார் வெளியே வந்து வீட்டிற்கு அருகாமையில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் வீட்டிற்கு செல்வதற்குள் பேட்டரியில் ஏற்பட்ட தீயானது அருகிலிருந்த பிரிட்ச், கிரைண்டர் மிக்சி போன்ற இயந்திரங்களுக்கு பரவி தீயில் எரிந்தது கொண்டிருந்ததை தொடர்ந்து குடத்தில் தண்ணீரை கொண்டு ஊற்றி தீயை அணைத்துள்ளனர்.

இந்த தீவிபத்தில் இருசக்கர வாகனத்தின் பேட்டரி, பிரிட்ச், கிரைண்டர், மிக்சி, சில்வர் சாமான்கள் தீயில் எரிந்து சேதமாகின. தீ விபத்து குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டு சம்பவ இடத்தில் போலீசார் விசாரனை மேற்கொண்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்த மூதாட்டி உயிர் தப்பினார்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!