பராமரிப்பு பணிகள்: சென்னையில் கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ரத்து…!!

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2021, 10:26 am
Quick Share

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் இன்று மற்றும் 31ம் தேதி, நவ., 7ம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரயில் சேவையில் இன்று மற்றும் 31ம் தேதி, நவம்பர் மாதம் 7ம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11 மணிமுதல் மதியம் 2.30 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்களும், தாம்பரம்-கடற்கரை இடையே காலை 11.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11.15 மணி, மதியம் 12, 1, 1.20, 2, 3 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 10.15, 11 மணி, மதியம் 12.25, 1.25, 2.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக மதியம் 1.30 மணிக்கு திருமால்பூரில் இருந்து கடற்கரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 209

0

0