“மாடு மேய்க்க போனா அடிக்கறாங்க“ : ஆதார் அட்டையை திருப்பி கொடுக்க ஆட்சியர் அலுவலகம் வந்த பெண் கண்ணீர்!!

23 November 2020, 12:48 pm
woman Cry - Updatenews360
Quick Share

கோவை : மாடு மேய்க்கவிடாமல் தனியார் தோட்ட உரிமையாளர்கள் தாக்குவதாக கூறி ஆதார அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை திருப்பி கொடுக்கிறேன் என்று பெண் ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் சகுந்தலாதேவி. மாடுகளை வளர்த்தி பால் வியாபாரம் செய்து வரும் இவர், மாடுகளுக்கு தண்ணீர் கொடுக்க பொள்ளாச்சி ஆற்றுப்படுகைக்கு அழைத்து செல்வது வழக்கமாக வைத்துள்ளார்.

ஆனால் அங்குள்ள தோட்ட உரிமையாளர்கள், ஆற்றில் இறங்கி மாடுகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டாம் என்று கூறுவதாகவும், தோப்புக்குள் சென்றால் அடிப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்.

மேலும், ஆற்றின் கரையோரங்களை தென்னை மரங்கள் மூலம் ஆக்கிரமித்து வைத்துள்ள தோட்ட உரிமையாளர்கள் மீது புகார் அளித்தால் எந்த அதிகாரிகளும் ஏற்பதில்லை என்று கூறும் சகுந்தலாதேவி ஆட்சியரிடம் மனு அளிப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை இல்லை என்றால், ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடமே திருப்பி கொடுக்க உள்ளதாகவும் தனது குமுறல்களை வெளிப்படுத்தினார்.

Views: - 0

0

0