பவானி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 கல்லூரி மாணவர்கள் சடலமாக மீட்பு… நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
31 October 2022, 8:41 pm
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 கல்லூரி மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மாம்பட்டி பகுதியில் பவானி ஆற்றில் கோவை தனியார் கல்லூரி MBA முதலாமாண்டு படிக்கும் 10 மாணவர்கள் ஒன்றாக குளிக்க சென்றனர். அவர்களில் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கனிஷ்க் (24), கரூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் ராஜதுரை (24), கோவை சூலூர் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் மகன் சுரேந்திரன் (24) ஆகியோர் எதிர்பாராத விதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

bhavani water - updatenews360

அவர்களை தீயணைப்புத்துறையினர் பரிசல் ஓட்டிகளின் உதவியுடன் தேடி வந்த நிலையில், இன்று மேட்டுப்பாளையம் சாமண்ணா வாட்டர் டேங்க் அருகே ராஜதுரையும், வெள்ளிப்பாளையம் இரண்டாம் பவானி துணை மின் நிலையம் அருகே கனிஷ்க்கையும் குத்தாரிபாளையம் அருகே சுரேந்திரன் உடலையும் சடலமாக மீட்டனர்.

bhavani water - updatenews360

மீட்கப்பட்ட மூவரின் உடல்களும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இறந்த மாணவர்களின் சடலத்தை பார்த்த பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது.

Views: - 289

0

1